சுரேஷ் சலேவை விளக்கமறியலில் வையுங்கள்! மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி எஸ்.பி. மனோரி சலே, ஜனாதிபதியிடம் அநுரகுமார திசாநாயக்கவிடம் அவசர எழுத்துப்பூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்தோடு, தனது கணவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பாமல் சிறைச்சாலைக்கு அனுப்புமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் சிஐடியினர் சுரேஷ் சலேவை கொடுமைப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம் எனவும் மனோரி சலே சுட்டிக்காட்டினார்.
எனவே சுரேஷ் சலேவின் உடல்நிலைநிலையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மனோரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.