வென்னப்புவ பகுதியில் இரகசியத்தகவலில் சிக்கிய பெண்
புத்தளம் - வென்னப்புவ பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
67 லீட்டர் மற்றும் 500 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று (22.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபானம்
சட்டவிரோத மதுபானக்கும்பல் குறித்த இரகசியத்தகவலின் அடிப்படையில், வென்னப்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.

அதன்படி, நைனமடமாவை சேர்ந்த சந்தேகநபரிடமிருந்து மொத்தம் 67.5 லீட்டர் சட்டவிரோத மதுபானம் அடங்கிய 90 போத்தல்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம் News Lankasri