மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர சிறையில் செய்யும் செயல்!
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிறையில் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலை வளாகத்தில் அநேகமான நேரங்களில் 'சக்மன் பாவனா' தியான நடையில் ஈடுபடுவதனை காண முடிவதாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காலை வேளையில் சிறைச்சாலை அதிகாரிகளை சந்திக்கும் போது, அவர் புன்னகையுடன் காலை வணக்கம் கூறி வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றத் தவறியமை குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு , முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இருவருக்கும் சிறையில் புத்தகங்கள் வாசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள் News Lankasri