வனாத்தவில்லு வெடிபொருள் பதுக்கல் : சஹ்ரானின் சகாக்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை
2019ஆம் ஆண்டு புத்தளம் வனாத்தவில்லு, லக்டோஸ் தோட்டப் பகுதியில் உள்ள காணியொன்றில் வெடிபொருட்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பதுக்கி வைத்தமை தொடர்பான வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட இரு பிரதிவாதிகளுக்கும் கொழும்பு மூவரடங்கிய மேல்நீதிமன்றம் தலா 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டுகளைப் பிரதிவாதிகள் இருவரும் ஒப்புக்கொண்டதையடுத்து, லால் பண்டார, நயோமி விக்ரமசேகர மற்றும் ரஷ்மி சிங்கப்புலி ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் இந்தத் தண்டனையை அறிவித்துள்ளது.

சஹ்ரான் ஹாசீம் உள்ளிட்டவர்களுடன்; இணைந்து புத்தளம், வண்ணாத்துவில்லு லெஸ்டோஸ் தோட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை களஞ்சியப்படுத்தியதாக குறித்த இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.