பாறையொன்றில் சிக்கியிருந்த ஆணின் சடலம்! உடலில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்
புத்தளம் - வென்னப்புவ மேற்கு கடற்பகுதியில் கடலில் பாறையொன்றில் சிக்கியிருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலத்தினை நேற்று காலை (22) கடற்படை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்றொழிலாளர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் பாறைச்சுவரில் சடலம் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
25 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர் என சந்தேகிக்கப்படும் சடலத்தின் உடலில் ஒரு பெல்ட் கட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அங்குலான கடற்பகுதியில் கவிழ்ந்த கடற்படை கப்பலில் இருந்து காணாமல்போன மாலுமியின் சடலம் இதுவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இது குறித்து கடற்படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸ் கூறியுள்ளது.
இதற்கமைய, நீதிபதி விசாரணைக்கு பிறகு, பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனைக்கு சடலம் அனுப்பப்பட உள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடற்படையும் வென்னப்புவ பொலிஸாரும் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள் News Lankasri