செம்மணி 540 : தமிழ்த் தேசியக் கட்சிகளின் அமைதியின் பின்னணி!

Mannar NPP Government chemmani mass graves jaffna
By A. Nixon Oct 06, 2026 06:20 AM GMT
Report

செம்மணி - அரியாலை சிந்துபாத்தி பொது மயானப் பகுதியில் இருந்து இதுவரை 540இற்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகளும், எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் பேரினவாதப் போர் மௌனிக்கப்பட்ட பின்னரான சூழலில், வடக்கு - கிழக்கு தாயகப் பிரதேச எங்கும் தொடர்ச்சியாகப் பல மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

ஆனால், இதுவரை உரிய சர்வதேச தரத்திலான விசாரணைகள் எதுவுமின்றி, இந்த இன அழிப்புச் சாட்சியங்கள் வெறுமனே கடந்துபோகும் பேசுபொருளாக மாத்திரமே திட்டமிட்டு சுருக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை குறித்த வாய்மூல அறிக்கை

இதற்கு மிகச்சிறந்த உதாரணம், மன்னார் சதோசா மனிதப் புதைகுழியாகும். அங்கு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் அமெரிக்காவிற்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால், அவை மன்னர் காலத்து பழமையான எலும்புகள் எனக்கூறி, அநீதியை மூடிமறைக்கும் வகையில் அந்த அறிக்கை அமைந்திருந்தது.

செம்மணி 540 : தமிழ்த் தேசியக் கட்சிகளின் அமைதியின் பின்னணி! | Semmani 540 Silence Of Tamil Nationalist Parties

பேராசிரியர் ராஜ் சோமதேவ போன்ற சிங்கள அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்த அமெரிக்க அறிக்கையை ஏற்க மறுத்தனர்.

இந்த அறிவியல் பூர்வமான முரண்பாடுகளினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டக் கோரி மன்னார் நீதிமன்றத்தில் இன்றும் சட்டப் போராட்டம் தொடர்கிறது.

அதேநேரம், இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளக நீதித்துறை மற்றும் விசாரணைப் பொறிமுறைகள் மீது தங்களுக்கு எள்ளளவும் நம்பிக்கையில்லை என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை மிகத் தெளிவாகவும் பகிரங்கமாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இப் பின்னணியில், ஈழத் தமிழர்களின் குருதி காய்வதற்குள் தமிழ்த் தேசியக் கட்சிகள் மௌனம் காப்பது ஏன் என்ற பலத்த கேள்வி எழுகிறது?

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி போன்ற தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த இன அழிப்புச் சாட்சியங்கள் குறித்துப் பாராமுகமாக இருந்துவிட்டு, தற்போது மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டணிகளை அமைத்துச் செயற்படுவதாக அறிவித்திருப்பது வேடிக்கை.

சர்வதேசப் பொறிமுறையை வலியுறுத்த வேண்டிய தமிழ்த் தலைமைகள், உலகமே நம்பிக்கையற்றது என்று சான்றளித்த இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளை மறைமுகமாக அங்கீகரிப்பது போன்ற தொனியில் அரசியல் செய்வது எந்த வகையில் நியாயமானது?

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கை குறித்த வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்காக ஐநா அமைத்துள்ள 'ஒஸ்லாப்' (OSLAP - Office of the High Commissioner for Human Rights Sri Lanka Accountability Project) எனப்படும் சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் கால அவகாசம் 2027 மார்ச்சில் நிறைவடையவுள்ளது.

அரசாங்கத்தின் சமகால அரசியல் அரங்கு

ஆகவே, சர்வதேச சமூகம் இலங்கைக்கு வழங்கிய கால அவகாசம் முடிவடைவதற்குள், உள்நாட்டில் ஏதோவொரு முன்னேற்றம் நடப்பது போன்றதொரு பொய்யான விம்பத்தைக் காண்பிக்க வேண்டிய கட்டாயம் அநுர அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அதற்காகவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளும், திடீர் கைதுகளும், மரண தண்டனைத் தீர்ப்புகளும் அவசர அவசரமாக வழங்கப்பட்டு வருகின்றன.

செம்மணி 540 : தமிழ்த் தேசியக் கட்சிகளின் அமைதியின் பின்னணி! | Semmani 540 Silence Of Tamil Nationalist Parties

அத்துடன், போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரிலான கைதுகள், விசாரணைகள், சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அவை தொடர்பான கண்துடைப்பு விசாரணைகள் எனப் பல சர்வதேசத் திசைதிருப்பல் நகர்வுகள் தற்போதைய சூழலில் மிகக் கச்சிதமாக அரங்கேறி வருகின்றன.

அநுர அரசாங்கத்தின் சமகால அரசியல் அரங்கு மிக நுட்பமாக, அதேவேளை ஈழத்தமிழர்களை நோக்கி ஆபத்தானதொரு புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டத்தைக் காண்பித்து நிற்கிறது.

இந்த ஆபத்தான நுட்பம் எந்தவொரு தமிழ்த் தேசியக் கட்சிக்கும் புரியவில்லையா? ”சுயநிர்ணய உரிமை” என்ற நியாயமான அரசியல் கோரிக்கைகளை நசுக்கவும், சர்வதேச பொறுப்புக் கூறலில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் 'தேசிய பாதுகாப்பு' என்ற காரணி மீண்டும் ஒருமுறை அரசியல் முதலீடாக்கப்பட்டுள்ளது.

ஏட்டிக்குப் போட்டியாக அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ”தேசிய பாதுகாப்பு” என்பதைக் கவசமாக எடுத்துக்கொண்டு, இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பைப் பாதுகாக்கக்கூடிய அத்தனை காரியங்களையும் செய்து முடித்துள்ளனர்.

குறிப்பாக, காணி அபகரிப்பு, பௌத்தமயமாக்கல், தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாத்தல் போன்ற விவகாரங்கள் இலங்கை அரசின் சட்டரீதியான செயற்திட்டங்களாக மாறியுள்ளன.

இந்த விவகாரத்தில் சிங்கள அரசியல் தலைவர்களிடையே கட்சி அரசியல் வேறுபாடுகள் எதுவுமே இல்லை. ஆனால், இலங்கைத் தமிழரசுக் கட்சியோ, தங்களின் சொந்தக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பாக ஒற்றையாட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விட்டுத் தீர்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

இத்தகைய தரங்கெட்ட அரசியல் இலட்சணத்தை வைத்துக்கொண்டு எப்படி சர்வதேச நீதியைக் கோர முடியும்? செம்மணி பற்றி எப்படிப் பேச முடியும்? அடுத்த ஆண்டு முடிவடையவுள்ள ஒஸ்லாப் சாட்சியப் பொறிமுறை பற்றியும், அடுத்து நகர்த்தவுள்ள சர்வதேச விசாரணை பற்றியும் தமிழரசுக் கட்சியால் எப்படி கோர முடியும்?

புதிய அரசியல் யாப்புக்கான பரிந்துரை

தற்போது எதிர்க்கட்சிகளாக உள்ள, ஆனால் முன்னைய அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளையும் அரச திணைக்களப் பதவிகளையும் வகித்த மலையகத் தமிழ்க் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து, மாகாண சபைகளை நடத்துதல், காணி விவகாரங்கள் பற்றிப் பேசுதல், புதிய அரசியல் யாப்புக்கான பரிந்துரைகளைச் செய்தல் என்று பகிரங்கமாகக் கூறியுள்ள பின்னணியில், தாங்கள் எத்தகைய அரசியலை முன்னெடுக்கிறோம் என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளிப்படுத்த வேண்டும்.

செம்மணி 540 : தமிழ்த் தேசியக் கட்சிகளின் அமைதியின் பின்னணி! | Semmani 540 Silence Of Tamil Nationalist Parties

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் அந்தப் பொறுப்பு உண்டு. டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சியும், தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் ஆட்சி அமைத்துள்ள ஜே.வி.பியும் 1994 இல், முதன் முதலாக ஜனநாயக அரசியலுக்குள் பிரவேசித்தன.

சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு அப்போது ஆதரவும் வழங்கியிருந்தன.

அவ்வாறானதொரு இணக்க அரசியலைச் செய்யும் தொனி, கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்தே தமிழரசுக் கட்சியிடம் வெளிப்படத் தொடங்கியது.

ஆகவே, நடப்பு 2026 ஆம் ஆண்டில், ”இணக்க அரசியல்”தான் தங்களின் அரசியல் நிலைப்பாடு என்பதைத் தமிழரசுக் கட்சி பகிரங்கமாக அறிவித்தால் சிறப்பாக இருக்கும்! அதேநேரம், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வா அல்லது இந்திய சமஸ்டி முறைமையா என்பதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US