அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்: பெரும் கலக்கத்தில் பாதாள உலகக்குழுக்கள்
நாட்டில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக விரிவான அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சட்டமூலம் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பதற்கான சட்டமூலம்' என பெயரிடப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள்
இதற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக இது சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்று சிறையில் இருக்கும் குற்றவாளிகள், சிறைக்குள் இருந்தவாறே குற்றச் செயல்களை மேற்கொள்வது தொடர்பாக விசாரணை நடத்த அவர்களை மீண்டும் பொலிஸ் காவலில் எடுக்க முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை நீண்ட காலம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர விசேட நீதிமன்ற நடைமுறை உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
கடுமையான தண்டனைகள்
தற்போதைய சாதாரண தண்டனைகள் மற்றும் சட்டங்களை விட, அதிக தண்டனைகளும் அதிக அபராதத்தொகைகளும் விதிக்கப்படும் வகையில் புதிய சட்ட சட்ட மூலத்தில பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி புரிபவர்களுக்கு எதிராக தற்போதிருப்பதை விடக் கடுமையான தண்டனைகளை வழங்க பரந்த அதிகாரங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் சலுகைகள் கிடைப்பதைத் தடுக்கவும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுமே இந்த புதிய சட்டமூலம் முன்வைக்கப்படுவதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள் News Lankasri