வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம், அம்பாந்தோட்டை, மன்னார், திருகோணமலை மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (09.07.2026) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, நாளை (10) காலை 11.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு
தீவிரமான தென்மேற்குப் பருவமழை நிலவுவதால் மத்திய, சபரகமுவ, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம், அம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் மேலதிக அறிவுரைகளைக் கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan