உடனே பதவி விலகுங்கள்! - நீதி அமைச்சருக்கு எதிரணி கடும் அழுத்தம்

Parliament of Sri Lanka Mujibur Rahman Negombo Prisons in Sri Lanka Harshana Nanayakkara
By Rakesh Jul 09, 2026 03:04 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசேட விசாரணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு சுதந்திரமாக ஒத்துழைப்பு வழங்கும் வகையில், தற்காலிகமாக அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது,

அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை

அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை

 

வன்முறையை ஏன் தடுக்க முடியவில்லை? 

"சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகளின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட நீதி அமைச்சரிடம், அங்கிருந்த அதிகாரிகள், 'எங்களுக்கு உத்தரவிட்டிருந்தால் இதனை நகத்தால் கிள்ளி எடுத்திருப்போம்' என கூறியிருந்தனர்.

உடனே பதவி விலகுங்கள்! - நீதி அமைச்சருக்கு எதிரணி கடும் அழுத்தம் | Resign Immediately Opposition Pressure Minister

அதாவது, முளையிலேயே கிள்ளியெறியப்பட்டிருக்க வேண்டிய சிறிய பிரச்சினை, உரிய நேரத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படாமையால் இன்று கோடரியால் வெட்டும் அளவுக்குப் பாரதூரமான நிலைமைக்குச் சென்றுள்ளது.

தடுக்கக்கூடிய நிலையில் இருந்த இந்த வன்முறையை ஏன் தடுக்க முடியவில்லை? கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதிகள் இருவர் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து, அன்று மாலை 12 வெளிநாட்டுக் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். அப்படியென்றால், அன்றைய தினமே வன்முறையுடன் தொடர்புடையவர்களையும் இடமாற்றியிருக்க வேண்டும்.

அந்தச் சரியான தீர்மானத்தை ஏன் எடுக்கவில்லை? நீதி அமைச்சர் இந்தச் சம்பவத்தின் பொறுப்பை ஏற்பதாகக் கூறியிருக்கின்றார். பொறுப்பை ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது. பொறுப்புக்கூறலும் அவசியம்.

தற்காலிகமாக பதவி விலக வேண்டும்

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

உடனே பதவி விலகுங்கள்! - நீதி அமைச்சருக்கு எதிரணி கடும் அழுத்தம் | Resign Immediately Opposition Pressure Minister

அமைச்சராகப் பதவியில் இருந்துகொண்டு இந்தக் குழுவின் முன்னால் சென்று சுயாதீனமாகப் பதிலளிப்பது கடினம். எனவே, தான் குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்தவும், விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவும் அவர் தற்காலிகமாகப் பதவி விலக வேண்டும்.

புதிய அரசியல் கலாசாரம் பற்றிப் பேசும் அரசு, எதிர்க்கட்சியில் இருந்தபோது முன்வைத்த முன்மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும்.

கடந்த காலங்களில் பல அமைச்சர்கள் தமக்கு எதிரான விசாரணைகளுக்காகப் பதவிகளைத் துறந்து, விசாரணை முடிவடைந்த பின்னர் மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட முன்னுதாரணங்கள் உள்ளன. அதைப் பின்பற்றி நீதி அமைச்சரும் செயற்பட வேண்டும்." - என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வலியுறுத்தினார்.

கொழும்பில் அதிரடியாக முடக்கப்பட்ட பெண்ணொருவரின் ஆடம்பர வீடு மற்றும் இலட்சக்கணக்கான சொத்துக்கள்

கொழும்பில் அதிரடியாக முடக்கப்பட்ட பெண்ணொருவரின் ஆடம்பர வீடு மற்றும் இலட்சக்கணக்கான சொத்துக்கள்

உயிரிழந்த கைதிகள் குறித்தும் மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்து நீதி வழங்க வேண்டும்!

உயிரிழந்த கைதிகள் குறித்தும் மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்து நீதி வழங்க வேண்டும்!

7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US