பழைய போகம்பர சிறை வளாகத்தில் புதிய சிறைச்சாலை நிர்மாணம்! வர்த்தமானி அறிவிப்பு
பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நேற்றைய (08) தினம் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
புதிய சிறைச்சாலை
சிறைச்சாலைகள் அவசரச் சட்டத்தின் பிரிவு 2 (அத்தியாயம் 54)-இன் படி, சிறைச்சாலைகள் அவசரச் சட்டத்தின் பணிகளுக்காக அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மிகப் பழைமையான சிறைச்சாலைகளில் ஒன்றான போகம்பர சிறைச்சாலை, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டு, தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
தற்போது குறித்த சிறைச்சாலையின் பழைய கட்டிடங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் வசம் இருக்க, புதிய மற்றும் தற்காலிக கட்டிடங்கள் மூலம் அங்கு புதிய சிறைச்சாலையொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri