மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ டொலர் கையிருப்பு வீழ்ச்சி!
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ டொலர் மற்றும் தங்க கையிருப்புச் சொத்துக்கள் கடந்த ஜூன் மாதத்தில் 6.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கியின் அண்மைக்கால புள்ளிவிவரங்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
உத்தியோகபூர்வ கையிருப்பு
இதற்கமைய, கடந்த மே மாதத்தில் 6,881 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்த உத்தியோகபூர்வ கையிருப்பு, ஜூன் மாத இறுதியில் 6,450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை, 431 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைவடைந்துள்ளது.

உத்தியோகபூர்வ இருப்புச் சொத்துக்களின் முக்கிய அங்கமாக விளங்கும் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு, 2026 ஜூன் மாதத்தில் 6,661 மில்லியன் டொலர்களில் இருந்து 6,254 மில்லியன் டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
தங்கக்கையிருப்பு
இது 407 மில்லியன் டொலர்கள் அல்லது 6.1 சதவீத வீழ்ச்சியாகும். இதேவேளை, மத்திய வங்கியின் தங்கக் கையிருப்பு 2026 ஜூன் மாதத்தில் 216 மில்லியன் டொலர்களில் இருந்து 191 மில்லியன் டொலர்கள் வரை, 11.7 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
இதற்கு முன்னர், கடந்த 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் முதற்தடவையாக, இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்புத் தொகை 2026 பெப்ரவரி மாதத்தில் 7 பில்லியன் அமெரிக்க டொலர் எல்லையைக் கடந்திருந்தது.
அந்த வகையில், பெப்ரவரி மாத இறுதியில் அதன் பெறுமதி 7,284 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri