வீதி விபத்துக்களை குறைக்க அரசு கொண்டுவரும் புதிய திட்டம்- வெளியான அறிவிப்பு
போக்குவரத்தை முறைப்படுத்தும் வகையில், குற்றங்களுக்கான குறைமதிப்பீட்டுப் புள்ளி முறைமை, வரும் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்காக அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரை ஆறு மாத காலத்திற்கு பொதுமக்களுக்கும் வாகன சாரதிகளுக்கும் இது தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வீதி விபத்துக்களை குறைக்க திட்டம்
இதற்கமைய, வாகனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய தகுதிச் சோதனைகளை அறிமுகப்படுத்த, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் திணைக்கள அதிகாரிகளின் நேரடிப் பரிசோதனை இன்றி, அங்கீகரிக்கப்பட்ட தனியார் வாகனத் திருத்தகம் மூலமாகவே தகுதிச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படவுள்ளது.
வீதி விபத்துகளைக் குறைத்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.