நாட்டை உலுக்கிய அக்குறணை கோர விபத்து! நால்வர் பலி - இருவர் கவலைக்கிடம்: சாரதி வழங்கிய வாக்குமூலம்
கண்டி–யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் அக்குறணை 7ஆம் மைல் கல் பகுதியில் சீமெந்து ஏற்றிய கனரக வாகனம் பல வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட கோர விபத்து தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கண்டி - மாத்தளை A-9 வீதியில், அக்குறணை 7 ஆம் கட்டை குருகொட சந்தியில் நேற்று முன்தினம் (19) சீமெந்து ஏற்றிய கனரக வாகனம் பல வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்ததோடு, மேலும் காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக அக்குரணை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கால்களை இழந்துள்ள இருவர்
காயமடைந்தவர்கள் தற்போது கண்டி மற்றும் அக்குறனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் இருவரும் தங்கள் கால்களை இழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், விபத்தின்போது சுமார் 8 வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதோடு, சம்பவம் தொடர்பில் 46 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் சாரதியிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சீமெந்து ஏற்றிய கனரக வாகனம் பிரேக் செயலிழந்ததால் வாகனம் கட்டுப்பாடின்றி முன்னோக்கிச் சென்றதாகவும், அப்போது மாத்தளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்துடன் மோதியிருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதால் வாகனத்தை மறுபுறம் திருப்பியதாகவும் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வாகனத்தின் அதிக எடை காரணமாக அது கவிழ்ந்ததாகவும் அவரது வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தை நேரில் பார்த்தவர்களின் சாட்சியம்
இந்நிலையில், விபத்தை நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, பிரேக் இல்லாத நிலையில் உயரமான குன்றிலிருந்து வந்த அந்த வாகனம், இறுதியில் பல வாகனங்களுடன் மோதி உருண்டு சென்றதாக நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அங்கு இதுபோன்ற பல உயிரிழப்பு விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இங்கு கனரக வாகனங்களின் பிரேக்குகள் அடிக்கடி பழுதடைவதால், வேகத்தடை அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளை அமைக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
உயிரிழந்த நால்வரின் பிரேதப் பரிசோதனைகள் கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்டு, உடல்கள் தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மத்திய மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த சம்பவம் குறித்து ஒரு சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 12 மணி நேரம் முன்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri