இரத்து செய்யப்பட்ட அனோஜன் சிவராசாவின் மரணதண்டனை: அடுத்தக்கட்ட பணிகளில் அரசாங்கம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனையில் இருந்து அனோஜன் சிவராசாவின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும், ஆனால் இன்னும் சில அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று (20) பிற்பகல் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அனோஜன் சிவராசாவின் விவகாரம்
அனோஜன் சிவராசாவின் விவகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் இந்த விடயம் இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எமது சட்ட மற்றும் இராஜதந்திர தலையீட்டின் பலனாக அனோஜன் சிவராசாவின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. மரண தண்டனையிலிருந்து நீக்கப்பட்டது.
அரசாங்கத்துடனான கலந்துரையாடலின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மற்றும் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட குழுவினர் தமது சொந்த செலவில் சவூதி அரேபியா சென்றுள்ளனர்.
இந்த நாட்டில் ஒரு இளைஞனின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் தலையிட்டனர். அதற்கு மரியாதை உண்டு. இதை அரசு தூதரக மட்டத்தில் கண்காணித்து வந்தது. ஒரு படி வெற்றி பெற்றது.
எங்களின் அடுத்த கட்டமாக மன்னரிடம் நினைவு கடிதம் வழங்க வேண்டும். இதுவரை அனைத்து தரப்பிலும் விவாதித்துள்ளோம். இன்னும் சில படிகள் உள்ளன. அதற்காக உழைத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரபல அரசியல்வாதியொருவரை கொலை செய்ய இரகசிய பணிப்புரை வழங்கிய மகிந்த - வெளிப்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்