நகை கடைகளை குறிவைத்து மற்றுமொரு புதிய வகை மோசடி! பொலிஸார் தீவிர விசாரணை
தனது மகளுக்கு பரிசளிக்க தங்க காதணிகளை வாங்குவது போல் நடித்து போலி ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை செய்து தங்க நகைகளை திருடிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பேருவளை நகரில் உள்ள நகை கடையில் ரூபாய் 1,07,000 மதிப்புள்ள தங்க நகை இவ்வாறு நேற்று (19) திருடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் போலி ஆன்லைன் பணம் செலுத்துதலை காட்டி தங்க நகையை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்ற நிலையில் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மற்றொரு பெண்ணின் உதவி
சந்தேகநபர் முழுவதும் கருப்பு நிற உடையில் கடைக்கு வந்து தங்க நகைகளை தேர்ந்தெடுக்கும்போது, இது குறித்து தனக்கு அதிகம் தெரியாது என்று மிகவும் நம்பும்படியாக பேசி கடையில் இருந்த மற்றொரு பெண்ணின் உதவியையும் நாடியுள்ளார்.

தனது ஏழு வயது மகள் பரீட்சையில் நன்றாக தேர்ச்சி பெற்றமையினால் காதணியை பரிசாக வழங்குவதாக கூறியுள்ளார்.
இதன்போது சந்தேகநபர் கடை உரிமையாளரிடம் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியுமா என்று கேட்டுள்ளார்.
தங்களிடம் வங்கி அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதால், ஆன்லைன் மூலம் தனது மகனின் கணக்கிற்குப் பணத்தை அனுப்புமாறு கடை உரிமையாளர் கூறியுள்ளார்.
அதன்படி, அந்த நேரத்தில் கடையில் இல்லாத தனது மகனை அழைத்து, சந்தேகநபரிடம் தனது வங்கிக்கணக்கு எண்ணை கொடுத்துள்ளார்.
இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு பிறகு, சந்தேகநபர் தனது கைப்பேசியில் பதிவு செய்யப்பட்ட ஒரு போலி ரசீதைக் கடை உரிமையாளரிடம் காட்டி தொகையைசெலுத்தியதாக கூறிவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
பணம் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை
கடை உரிமையாளர் தனது மகனிடம் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுவிட்டதா என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகநபர் மிகவும் தந்திரமாக தப்பிச்சென்றதாகக் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்ட்டுள்ளது.

இதன்பின்னர், பரிவர்த்தனை தொடர்பான பணம் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்த நிலையில் இது ஒரு மோசடி என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான பாதுகாப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கருப்பு உடை அணிந்திருந்த சந்தேகநபர், தங்க நகைகளை தேர்ந்தெடுப்பதும், பணத்தைச் செலுத்திவிட்டதைக் குறிக்கும் வகையில் தனது கைப்பேசியில் ஒரு போலி ரசீதைக் காட்டுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
மேலும், காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையில் இரகசிய அறையில் 18 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரட்டைப் படுகொலை! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 13 மணி நேரம் முன்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri