30 விநாடிகளுக்குள் முழுமையாக வீழ்ச்சியடைந்த மின் கட்டமைப்பு - பின்னணி குறித்து சர்ச்சை
கடந்த சனிக்கிழமை முற்பகல் 11.43 மணியளவில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.
அசாதாரணமான சூழ்நிலையொன்றின் கீழ் மின் உற்பத்தி நிலையம் ஒன்று கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 30 விநாடிகளுக்குள் முழுமையான கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டமைப்பு செயலாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றை மின் உற்பத்தி நிலையத்தின் பிரச்சினையானது முழு நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிலான முழுமையான மின்வெட்டிற்கு வழிவகுக்கக் கூடாது என மின்சாரத் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேசிய மின் கட்டமைப்பு
கடந்த சில ஆண்டுகளாக தேசிய கட்டமைப்பு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காக குறிப்பிடத்தக்க முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

இந்த அவசர மின்வெட்டு காரணமாக மின்சார நிறுவனங்களுக்கு மாத்திரம் 400 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நேரடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைத்தொழில்கள் மற்றும் வணிகங்கள் முடங்கியதன் காரணமாக ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீதான தாக்கம் இதைவிட மிகவும் பரந்ததாக இருக்கக்கூடும் என அவர் குறிப்பிடுகின்றார்.
ஆபத்தான நிலையில் மின்கட்டமைப்பு
2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள எச்சரிக்கை சமிக்ஞைகள் முறையாகச் செயல்பட்டனவா என்பது குறித்தும், அமைப்பின் பாதுகாப்பு வழிமுறைகளின் செயல்திறன் குறித்தும் சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

மின்வெட்டிற்கான காரணம் தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மின்சாரத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக, மலையகத்தின் மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் முந்தைய நாள் அவதானிக்கப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்துக் குறிப்பிடுகையில், கட்டமைப்பிற்குள் சூரிய சக்தி விநியோகம் உயர் மட்டத்தில் இருந்தமை தாக்கத்தைச் செலுத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 810 மெகாவாட் கொள்ளளவு கொண்ட நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குச் சில நாட்கள் ஆகும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரமாண்டமான மின் உற்பத்தி நிலையங்கள் மீதான அதீத தங்கியிருத்தலின் அபாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை முகாமைத்துவப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 13 மணி நேரம் முன்
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri