இலங்கை அரசாங்கத்தின் புதிய சட்டமூலங்கள்: கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இலங்கை அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலம் ஆகிய இரண்டும் மனித உரிமைகளுக்கும் சிவில் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக அமைவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.
அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தேர்தல் வாக்குறுதியில் ஒடுக்குமுறை சட்டங்களை நீக்குவதாக கூறிய போதிலும், இந்த புதிய சட்டமூலங்கள் அதே அடக்குமுறை அம்சங்களை மீண்டும் கொண்டுவந்து விடும் அபாயம் உள்ளதாக, கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இந்த சட்டங்கள், போதிய நீதிமன்ற மேற்பார்வையின்றி நீண்டகாலத் தடுத்து வைப்பு, தன்னிச்சையான கைது, சித்திரவதை, கண்காணிப்பு மற்றும் பேச்சு / நடமாட்டச் சுதந்திரத்தை முடக்கும் அதிகாரங்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்படக்கூடும் என்றும், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய இயக்குநர் எலைன் பியர்சன், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலம் பொலிஸாரின் சித்திரவதையை ஊக்கப்படுத்தும் வகையில் அமையக்கூடும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா? Manithan