முன்னால் ஆபத்தான மயில்கள்!! அமெரிக்க தூதுவரின் பதிவில் இடம்பிடித்த அறிவிப்பு பலகை
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
கொழும்பில் தாமரை கோபுரத்தை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்த முதல் 3 நாட்களில் 7.5 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாமரை கோபுரத்தினால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை வருமானம் >>> மேலும் படிக்க
2. உலக சந்தையில் எரிபொருட்களின் விலை ஏற்கனவே கணிசமான அளவு குறைந்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்த நாட்டில் எரிபொருளின் விலை குறையவில்லை என்பது தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் குறையாத எரிபொருள் விலை - அரசின் மீது கடும் அதிருப்தி >>> மேலும் படிக்க
3. குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளைஞர் சமுதாயத்திற்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது.
அதற்கிணங்க தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் >>> மேலும் படிக்க
4. இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தின் செலவுகளை ஈடுகட்ட 6.2 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்துவதற்கு நாணய சபையிடம் அனுமதி கோரியுள்ளார்.
எனினும் அதற்கன ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
வெளிநாடு செல்ல அரச நிதி கோரியுள்ள இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரி! வெளியாகியுள்ள தகவல் >>> மேலும் படிக்க
5. பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காணாமல்போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவரே காணாமல்போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவரொருவர் மாயம்! கடிதமொன்றும் மீட்பு - விசாரணைகள் தீவிரம் >>> மேலும் படிக்க
6. இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான இரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையம் கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் சர்வதேச விமான நிலையமொன்றில் இடைநிறுத்தப்பட்ட விமான நிலைய சேவைகள் >>> மேலும் படிக்க
7. கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி, இன்று முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு >>> மேலும் படிக்க
8. இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 359.17 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 369.93 ரூபாவாக காணப்படுகிறது.
இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வெளியானது அறிவிப்பு >>> மேலும் படிக்க
9. தென் மாகாணத்திற்கு முதல் முறையாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், வீதியில் பொருத்தப்பட்டிருந்த அறிவிப்பு பலகை ஒன்று தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
“முன்னால் மயில்கள் அவதானம்” என தமிழிலும் “முன்னால் ஆபத்தான மயில்கள்” அந்த அறிவிப்பு பலகையில் எழுத்தப்பட்டுள்ளதுடன் “மயில்கள் அதிகம் காணப்படும் பிரதேசம்” என்ற அர்த்தத்தில் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது.
நான் எப்போதும் ஆபத்தான மயில்களை கண்டதில்லை: அறிவிப்பு பலகையில் பிழை காணும் அமெரிக்க தூதுவர் >>> மேலும் படிக்க
10. மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நாளை(20) மற்றும் நாளை மறுதினம்(21) ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்வெட்டு நேரம் அதிகரிப்பு >>> மேலும் படிக்க

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
