கொழும்பு தாமரை கோபுரத்தினால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை வருமானம்

Colombo Sri Lanka
By Dhayani Sep 19, 2022 12:19 AM GMT
Report

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் தாமரை கோபுரத்தை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்த முதல் 3 நாட்களில் 7.5 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, முதல் 3 நாட்களில் சுமார் 14,000 பேர் கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாகவும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரை கோபுரத்தினால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை வருமானம் | Colombo Lotus Tower S

பார்வை நேரம்

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு வழங்கப்படும் கால அளவு நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தாமரை கோபுரத்தினால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை வருமானம் | Colombo Lotus Tower S

அதற்கமைய, நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அனுமதிச்சீட்டு இரவு 10 மணி வரை மாத்திரமே விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு தாமரை கோபுரத்தினால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை வருமானம் | Colombo Lotus Tower S

கொழும்பு தாமரை கோபுரம் 

கொழும்பில் உள்ள பெரே வாவிக்கு அருகில் அமைந்துள்ள 30,600 சதுர மீற்றர் உயரமான தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு தாமரை கோபுரத்தினால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை வருமானம் | Colombo Lotus Tower S

தாமரை கோபுரத்தின் மொத்த மதிப்பீடு முதலில் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டாலும், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தபோது அதற்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 113 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஆனால், இந்தக் கோபுரத்தை அமைப்பதற்காக சீனாவிடம் இருந்து பெற்ற கடனில் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலுத்த வேண்டியுள்ளது.

தாமரை கோபுரத்தின் சிறப்பு

தாமரை கோபுரத்தின் மொட்டு பகுதியின் கீழே உள்ள பகுதியில் 3 தளங்கள் அமைந்துள்ளன.அந்தப் பிரிவில், டிஜிட்டல் சினிமா, ஒரு மாநாட்டு அரங்கம், பல பிரபலமான வணிக வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான அலுவலகங்கள் நிறுவப்பட உள்ளன.

கொழும்பு தாமரை கோபுரத்தினால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை வருமானம் | Colombo Lotus Tower S

தாமரை கோபுரத்தின் மொட்டு உள்ள பகுதி 7 தளங்களைக் கொண்டது. அதன் முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் 2 விழா மண்டபங்கள் நிறுவப்பட்டுள்ளன மற்றும் ஐந்தாவது தளம் சுழலும் உணவகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 7வது தளம் பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US