நான் எப்போதும் ஆபத்தான மயில்களை கண்டதில்லை: அறிவிப்பு பலகையில் பிழை காணும் அமெரிக்க தூதுவர்
தென் மாகாணத்திற்கு முதல் முறையாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், வீதியில் பொருத்தப்பட்டிருந்த அறிவிப்பு பலகை ஒன்று தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அறிவிப்பு பலகையில் பிழை
“முன்னால் மயில்கள் அவதானம்” என தமிழிலும் “முன்னால் ஆபத்தான மயில்கள் ” அந்த அறிவிப்பு பலகையில் எழுத்தப்பட்டுள்ளதுடன் “மயில்கள் அதிகம் காணப்படும் பிரதேசம்” என்ற அர்த்தத்தில் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர் தனது வாழ்நாளில் எப்போதும் ஆபத்தான மயில்களை கண்டதில்லை எனக் கூறியுள்ளார்.
“ திங்கள் கிழமை காலை வணக்கம்!. நான் வீதியில் பயணித்து கொண்டிருக்கின்றேன். தென் மாகாணத்திற்கான எனது முதல் உத்தியோகபூர்வ விஜயம். முதல் அவதானிப்பு- நான் எப்போதும் ஆபத்தான மயில்கள் பற்றி சிந்தித்ததில்லை. எனினும் அவற்றை தேடுவதை என்னால் நிறுத்த முடியாது” என அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
Good Monday morning! I’m on the road this week, my first official visit to Southern Province. First observation: I’d never imagined a dangerous peacock, but now I can’t stop looking for them! pic.twitter.com/5RD4LG84xi
— Ambassador Julie Chung (@USAmbSL) September 19, 2022





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
