வெளிநாடு செல்ல அரச நிதி கோரியுள்ள இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரி! வெளியாகியுள்ள தகவல்
இலங்கை அரசாங்கத்தின் சில உயர்மட்ட அலுவலகங்களில் அரச இயந்திரங்கள் சீராக இயங்குவதை உறுதி செய்ய சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அண்மையில் அரசாங்கம் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
புதிய திட்டங்களுக்கு நிதி இல்லை
இதன்படி, திறைசேரியால் அங்கீகரிக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த புதிய திட்டங்களுக்கும் நிதியளிக்கப்படாது என்பது தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
நிலையான பொறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் செலவுகளை தாங்களாகவே நிர்வகிப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும் என்றும் அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
வெளிநாடு செல்ல அரச நிதி கோரும் அதிகாரி
இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தின் செலவுகளை ஈடுகட்ட 6.2 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்துவதற்கு நாணய சபையிடம் அனுமதி கோரியுள்ளார்.
எனினும் அதற்கன ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த அதிகாரி ஏற்கனவே மத்திய வங்கியின் சிறப்பு கொடுப்பனவுகளை பெற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
