சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஆபத்தான இலங்கையர்கள்! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 225 சந்தேகநபர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) தற்போது சிவப்பு அறிவிப்புகளை பிறப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை
இதற்கமைய, பாதாள உலக கும்பலினை சேர்ந்த 91 சர்வதேச குற்றவாளிகள் இருப்பதாகவும், இன்டர்போல் மூலம் அவர்களுக்கு சிவப்பு அறிவிப்புகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

செப்டெம்பர் 21, 2024 க்குப் பிறகு 20 சர்வதேச குற்றவாளிகள் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், இராஜதந்திர உறவுகளின் அடிப்படையில் 12 சந்தேகநபர்கள் இந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட 30 சந்தேகநபர்கள் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், ரஷ்யா, பிரான்ஸ், கனடா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ளதாகவும், அவர்களில் சிலர் தற்போது அந்த நாடுகளில் தடுப்பு காவலில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு கடத்த நடவடிக்கை
அந்த நாடுகளுடன் ஒருங்கிணைந்து சந்தேக நபர்களை இந்த நாட்டிற்கு உடனடியாக நாடு கடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மே உட்பட பல பாதாள உலகத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri