பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு விரைவில் சிக்கல்! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான ”கெஹெல்பத்தர பத்மே”உள்ளிட்ட பல பாதாள உலக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
30 தொலைபேசி அழைப்புகளில் நடத்தப்பட்ட விசாரணை
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் பத்மே உட்பட பல நபர்களின் 30 தொலைபேசி அழைப்புகளில் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த உண்மைகள் வெளிவந்ததாக அவர் கூறியுள்ளார்.

அதன்படி, அரசியல்வாதிகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், முழுமையான விசாரணைக்கு பிறகு தெளிவான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"கெஹல்பத்தர பத்மே உட்பட பல பாதாள உலக நபர்களை பொலிஸார் கைது செய்த பின்னர் விசாரணைகள் தொடர்கின்றன. அவர்களிடம் இருந்த 30 தொலைபேசிகள் குறித்து தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றன.
வாக்குமூலங்கள் பதிவு
அந்த தொலைபேசிகள் மற்றும் அவர்களின் வாக்குமூலங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள், அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.

அந்த அரசியல்வாதிகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
முழுமையான விசாரணைக்குப் பிறகு இது குறித்து தெளிவான அறிக்கை வெளியிடப்படும். விசாரணைகள் தற்போது மிகவும் சிறப்பாக முன்னேறி வருகின்றன." என்றும் தெரிவித்துள்ளார்.
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam