ரவி கருணாநாயக்கவுக்காக சஜித் ஏற்பாடு செய்த கொண்டாட்டம்.. பின்னணியில் நடந்த அரசியல் பேச்சுக்கள்
புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பிறந்தநாளை ஒட்டி அரசியல் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரவி கருணாநாயக்க, கடந்த 19ஆம் திகதி தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில், பிறந்தநாள் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அறிவுறுத்தலின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிறந்தநாள் கொண்டாட்டம்
சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட சுமார் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த நிகழ்வின் போது முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து உரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ரவி கருணாநாயக்க நிகழ்விற்கு வந்ததும், அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், இரு கேக்குகள் கொண்டு வரப்பட்டு அனைவருக்கும் பகிரப்பட்டுள்ளன.

இதன்போது, தனது வாழ்த்துரையில் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைவதற்கு சமூகத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரவி கருணாநாயக்க, இரு கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டிற்காக பெரும் பணிகளை ஆற்ற முடியும் என தெரிவித்துள்ளதுடன் மக்கள் இதனை எதிர்பார்ப்பதாகவும், இரு தரப்பினரும் நிச்சயமாக ஒன்றிணையக் கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த குறுகிய பிறந்தநாள் நிகழ்வை ஏற்பாடு செய்த சுஜீவ சேனசிங்க, எதிர்க்கட்சியின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் எதிர்காலத்திலும் இதுபோன்ற எளிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ரஜினிகாந்த் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை.. நடிகர் மீசை ராஜேந்திரன் வீட்டு திருமணம்.. வீடியோ இதோ Cineulagam