இலங்கையில் குறையாத எரிபொருள் விலை - அரசின் மீது கடும் அதிருப்தி
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை ஏற்கனவே கணிசமான அளவு குறைந்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்த நாட்டில் எரிபொருளின் விலை குறையவில்லை என்பது தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை
உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப இந்த நாட்டில் எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் பதினைந்தாம் திகதிகளில் திருத்தம் செய்யப்படும் என முன்னர் தெரிவித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மேலும் விலை சூத்திரம் வாக்குறுதி அளித்தபடி அதனை செயற்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கையின் முதல் கரிநாள்...! 10 மணி நேரம் முன்

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri
