எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள பெருந்தொகை பணம்
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரத்மலானை, பெலக்கடை சந்திக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் எரிபொருள் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவிலும் பதிவாகியுள்ளது.
கொள்ளை சம்பவம்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர்களை கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இருவர், அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதன்போது, 1,158,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை

சந்தேகநபர்கள் தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri