எரிபொருள் தொடர்பில் அமைச்சர் கஞ்சன வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் தற்போதைய எரிபொருள் கையிருப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் இறக்கும் பணி
அதில், பெட்ரோல் 92 இன் 37,000 மெட்ரிக் தொன் இறக்கும் பணி இன்று தொடங்குகிறது.
100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இறக்கும் பணி இன்று தொடங்குகிறது.
2 நாட்களுக்கு முன்பு இறக்கத் தொடங்கிய 40,000 மெட்ரிக் தொன் டீசல் இறக்கும் பணி நாளை காலை நிறைவடைகிறது.
மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் பணம் செலுத்தினால் விடுவிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
Fuel Cargo Update -
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 16, 2022
One 37,000 MT Petrol 92 Cargo & One 100,000 MT Crude Oil Cargo will commence unloading today. 40,000 MT Diesel Cargo that commenced unloading 2 days ago will conclude unloading tomorrow morning. One more 40,000 MT Diesel Cargo to be released upon payment.