யாழில் உள்ள பள்ளிவாசலுக்குள் வாளுடன் சென்றவரால் பரபரப்பு
யாழில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றிரவு(09/03/2026) தொழுகை இடம்பெறும் போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றையதினம் தொழுகை இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது, நபர் ஒருவர் கையில் வாளோடு இன்னொரு இளைஞரை துரத்திச் சென்றவேளை குறித்த இளைஞன் பள்ளிவாசலுக்குள் புகுந்து, அங்குள்ள மதிலால் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது வாளுடன் வந்த சந்தேகநபர், பள்ளிவாசலில் இருந்த இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டதுடன், வாள் பறிமுதல் செய்யப்பட்டது. எனினும், வாளோடு வந்த சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.



