முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு காரைதீவு பிரதேச சபையின் அமர்வில் அஞ்சலி

Sri Lankan Tamils Tamils Mullivaikal Remembrance Day
By Rakesh May 17, 2026 04:06 PM GMT
Report

ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் நான்காவது சபையின் பதினொராவது அமர்வு நேற்று காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற போதே இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அவர் தலைமை உரையாற்றுகையில் முள்ளிவாய்க்கால் அவலம் தொடர்பாக உரையாற்றி மௌன அஞ்சலிக்கு வேண்டுகோள் விடுத்தார். அதனையேற்று அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

அங்கு தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமைமை உரையாற்றுகையில், "இந்தவாரம் எமது ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை வாரமாகக் காணப்படுகின்றது.

சுவிஸில் இருந்து யாழ். வந்த நபர் கொடூரமாக படுகொலை! பணம் மற்றும் நகைகள் மாயம்..

சுவிஸில் இருந்து யாழ். வந்த நபர் கொடூரமாக படுகொலை! பணம் மற்றும் நகைகள் மாயம்..

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை

இலங்கையிலே எண்ணிக்கை அடிப்படையில் தமிழர்கள் சிறுபான்மையினராக காணப்பட்டாலும் அவர்களை அடக்கி ஒடுக்கி கடந்த அரசுகள் ஆட்சிகள் செய்து வந்தன.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு காரைதீவு பிரதேச சபையின் அமர்வில் அஞ்சலி | Mullivaikkal Karaitivu Pradeshiya Sabha Session

இன்று ஒரு சிறந்த ஆட்சியாக காணப்படுகிறது என்று கருதப்பட்டால் உண்மையாக இந்த அரசாங்கம் சிறுபான்மை இனங்களான தமிழ்பேசும் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வு திட்டத்தை வடக்கு - கிழக்குக்கு முன்வைக்க வேண்டும்.

அந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இறந்த ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென்றால் அவர்களுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும். மேலும் புலம்பெயர் உறவுகள் இந்த யுத்தத்தில் ஊனமுற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

உப தவிசாளர் எம் எச் எம். இஸ்மாயில் பேசுகையில், "அண்மையில் சாய்ந்தமருதுக்கான நகர சபை தீர்மானம் உயர் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

தற்பொழுது எல்லை நிர்ணயம் செய்யப்படும் வேலை ஆரம்பமாக இருக்கின்றது. இந்த நேரத்தில் சாய்ந்தமருதின் தென்புற எல்லையாகிய காரைதீவு பிரதேச சபையின் எல்லைகள் தீர்க்கமாக வரையறுக்கப்பட வேண்டும். எந்த இடத்தில் இந்த, அந்த, தென்புற எல்லை இருக்கின்றன என்பதனை தவிசாளர் அறிவிக்க வேண்டும்.

கடந்த வாரம் ஆர்.கே.எம். வீதியில் டெங்கு நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டிருக்கின்றார். இதனை மேலும் பரவாமல் தடுப்பதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்." என்றார். சுமார் அரை மணி நேரத்தில் இந்த 11ஆவது அமர்வு நிறைவுற்றது.

சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 பேர் மாயம்.. தீவிர விசாரணையில் புலனாய்வாளர்கள்!

சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 பேர் மாயம்.. தீவிர விசாரணையில் புலனாய்வாளர்கள்!

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழர் பகுதிகளில் விஷேட நடைமுறை

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழர் பகுதிகளில் விஷேட நடைமுறை

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US