சுவிஸில் இருந்து யாழ். வந்த நபர் கொடூரமாக படுகொலை! பணம் மற்றும் நகைகள் மாயம்..
சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த முதியவர் ஒருவர் சண்டிலிப்பாய் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வல்லிபுரம் சந்திரசேகரம் என்ற 67 வயதுடைய முதியவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி இந்தப் படுகொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார், குறித்த நபரிடம் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றையும் கொலைக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை..
குறித்த நபர் நீண்ட காலமாக சுவிஸ் நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 மாத காலமாக விடுமுறையில் சண்டிலிப்பாயில் உள்ள தனது வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் அவருடன் குடும்பத்தார் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நேற்றைய தினம்(16) மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற நிலையில், தூர்நாற்றம் வீசியதை அடுத்து, வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்ற போது, உடலில் வெட்டு காயங்களுடன் முதியவரின் சடலம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில், அடிப்படையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், கமரா சேதப்படுத்தப்படுவதற்கு முன்னரான பதிவுகளின் அடிப்படையில், கடந்த 14ஆம் திகதி இரவு முகமூடி அணிந்த இருவர் சமையலறை வழியாக அந்த வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர்.
இதனையடுத்து பாதுகாப்பு கமராவை சேதப்படுத்தியப் பின்னர், வீட்டினுள் இருந்த முதியவரை படுகொலை செய்து விட்டு, அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை குறித்த சந்தேகநபர்கள் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை முதியவரின் உடற்கூற்று பரிசோதனையின் போது, உடலில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 41 நிமிடங்கள் முன்
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan