விட்ஸ் கார் ஒன்றை 1.2 மில்லியன் ரூபாவிற்கு தருவதற்கு தயாரான அநுர தரப்பு! தலைகீழான இன்றைய நிலை..
விட்ஸ் கார் ஒன்றை 1.2 மில்லியன் ரூபாவுக்குத் தருவோம் என்று மேடைகளில் முழங்கிய ஆட்சியாளர்கள், இன்று வாகனங்கள் மீது மேலதிகமாக 50 சதவீத வரியைச் சுமத்தி மக்களை வஞ்சித்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராமவில் மாகம மஹாநாம தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அரசின் பொருளாதாரக் கொள்கைகளைச் சரமாரியாகக் குற்றஞ்சாட்டினார்.
சரியும் ரூபாவின் பெறுமதி
வரி அதிகரித்தாலும் வாகனங்களின் விலை உயராது என நிதிப் பிரதி அமைச்சர் கூறுவது வேடிக்கையானது என்று சாடிய சஜித், இவ்வாறான முட்டாள்தனமான கருத்துக்களைக் கூறுவதை விடுத்து, மக்களின் கோணத்திலிருந்து பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசு பழக வேண்டும் என்றார்.

இந்தநிலைக்கு ஜனாதிபதி, அரசு மற்றும் அதற்குத் துணையாக இருக்கும் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மிக வேகமாகச் சரிந்து வருவது குறித்து அவர் கவலை வெளியிட்டார்.
மேலும், "ரூபாவின் வீழ்ச்சி பணவீக்கத்தைத் தூண்டி, அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயர்த்தும். இது சாதாரணக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.
அடிப்படை அறிவு
ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு அடிப்படைப் பொருளாதார அறிவு கூட இல்லை.

ஏற்றுமதி வருமானம், சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமே ரூபாவைக் கட்டுப்படுத்த முடியும். அதை விடுத்து மக்களை வரிச்சுமைக்குள் தள்ளுவது பாரிய பிழை" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
"சர்வதேச மோதல்களால் ஏற்படும் பொருளாதார அழுத்தங்களை அரசு முன்கூட்டியே கணிக்கத் தவறிவிட்டது. தற்போதைய சூழலில் மக்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களை மற்றும் நிவாரணங்களை அதிகரிக்க வேண்டுமே தவிர, அதைக் குறைக்கக் கூடாது" என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது வலியுறுத்தினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam