வங்காள விரிகுடாவில் மீண்டும் வலுப்பெறும் தாழமுக்கம் - அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அவதானம்!
இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, திருகோணமலையிலிருந்து சுமார் 630 கி.மீ. வடகிழக்கில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று(16.11.2026) மாலை புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர், நவம்பர் 17ஆம் திகதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்
இதன் காரணமாக, இன்று நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலின்போது அவதானமாக இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.