சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 பேர் மாயம்.. தீவிர விசாரணையில் புலனாய்வாளர்கள்!
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பிரிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அறுபது இலங்கை குற்றவாளிகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தங்கி இருந்த இடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தகவல் வழங்கியுள்ளார்.
குற்றவாளிகள் எந்த ஒரு நாட்டுக்கு தப்பி சென்றாலும் அவர்களை சட்டத்தின் முன்கொண்டு வருவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிவப்பு பிடிவிராந்து
புலனாய்வு பிரிவின் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகர்கள் மோசடிகாரர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு இவ்வாறு சர்வதேச சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் சர்வதேச சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 40 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த நேரத்திலும் தாம் கைது செய்யப்படலாம் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ள இந்த நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பித்து சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri