வரலாற்று சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்ட மாணவி!
காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற் தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று இவ்வரலாற்றுச் சாதனையைப் புரிந்துள்ளார்.
சாதனை
கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கிடைத்தாலும் தங்கப் பதக்கம் கிடைப்பது இதுவே முதற்தடவையாகும்.
49ஆவது தேசிய விளையாட்டு விழாவானது காலி மாவட்டத்தில் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமாகி இன்றையதினம் (31) நிறைவடையவுள்ளது.
நேற்றையதினம் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சசிகுமார் ஜெஸ்மிதா அவர்களிற்கும் அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பயிற்றுவிப்பாளர் மற்றும் மாவட்ட பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரினதும் உத்தியோகத்தர்களினதும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.





ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
