கொழும்பில் மகனின் கொடூர தாக்குதலில் தாய் பலி
வத்தளை பொலிஸ் பிரிவின் ஹேக்கித்த பகுதியில் மகனின் கொடூர தாக்குதலில் தாய் உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் வாங்குவதற்காக வீட்டிலிருந்து தொலைக்காட்சி பெட்டியை எடுத்துச்செல்ல முயன்ற தனது மகனை தாய் தடுத்தபோது கொடூரமாக தாக்கப்பட்ட தாய் உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவத்தில் ஹேக்கித்த பகுதியை சேர்ந்த சுசிலா டி சில்வா என்ற 58 வயது பெண் உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் திரட்டும் நோக்கம்
போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் திரட்டும் நோக்கத்தில் 29 வயது மகன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாய் ராகமை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,16 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய மகன், தனது தாயை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
மீண்டும் விளக்கமறியல்
இருப்பினும், அவரது தாயாரின் மரணத்தைத் தொடர்ந்து கொலைக் குற்றச்சாட்டின் பேரில், மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் நடத்தியுள்ளனர்.