பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம் மற்றும் வன்முறை! உரை நிகழ்த்த தயாராகும் ஜனாதிபதி
பிரான்சின் தற்போதைய சூழ்நிலை குறித்து ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
முன்னதாக, விலைவாசி உயர்வு மற்றும் பொதுச் சேவைகள் முடக்கத்திற்கு எதிராக பிரான்ஸ் நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்கள் தீவிர வன்முறையாக மாறியுள்ளன.
பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்
பாரிஸ், லீல், மார்சேய், போர்டோ மற்றும் லில்லி போன்ற முக்கிய நகரங்களில் கடைகள், வர்த்தக மையங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.

லிமோஜஸ் (Limoges) நகரில் உள்ள 143 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் (Town Hall) தீவைத்து எரிக்கப்பட்டது இந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்ட 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறைகளில் 600-க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்துள்ளனர். பாரிஸில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
பதவி விலக வேண்டும்
முன்னணி வணிக நிறுவனங்களான Carrefour போன்றவற்றின் 50-க்கும் மேற்பட்ட கடைகள் சேதப்படுத்தப்பட்டு சூறையாடப்பட்டதால் கோடிக்கணக்கான யூரோ இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வன்முறைகளுக்கு தீவிர இடதுசாரி அமைப்புகளே காரணம் என அரசு குற்றம் சாட்டியுள்ளது.
அதேவேளையில் தீவிர வலதுசாரி தலைவர் ஜோர்டான் பாரடெல்லா, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
இலக்கு வைக்கப்படும் ஜனாதிபதி அநுர..!பரவும் மிரட்டல் காணொளிகள் -அரசாங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை