வடக்கில் களமிறங்கிய இந்திய உயர்மட்ட குழு! பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் (Photos)
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இந்தியக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் (09.02.2023) தனி விமானம் மூலம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளனர்.
அன்றைய தினமே அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
அபிவிருத்திப் பணிகள்
நேற்று நண்பகல் யாழ்ப்பாண நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாண மக்கள் 250 பேருக்கு உலர் உணவு உதவிப் பொதிகளை இணை அமைச்சர் வழங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவரும் கலந்துகொண்டுள்ளார்.
பின்னர் காங்கேசன் துறைமுகத்துக்குச் சென்ற இந்தியக் குழுவினர், இந்திய உதவியில் அங்கு செய்யப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.
அத்துடன், பாண்டிச்சேரிக்கும் காங்சேன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்படவுள்ள பயணிகள் கப்பல் சேவையின் சாத்தியங்கள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர்.
காங்கேசன்துறையை அடுத்து மயிலிட்டி மீன் பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, எல்லை தாண்டிய குற்றத்திற்காகப் பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் விசைப்படகுகளையும் பார்வையிட்டுள்ளனர்.
ஆலய கட்டுமானப் பணிகள்
மாலையில் மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 150 பேருக்கு உணவுப் பொதி வழங்கி வைக்கும் நிகழ்விலும் இந்தியக் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
இன்று (10.02.2023) காலை மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இவர்களுடன், யாழ்ப்பாண - இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெய பாஸ்கர் கலந்து கொண்டார்.
இதன்போது, விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதோடு, இந்திய அரசின் நிதி உதவியுடன் முன் னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதோடு, ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.
இந்திய இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் தலைமையிலான குழுவினர் நாளைமறுதினம் வரை யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.














உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
