யாழில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கிய இந்திய இணையமைச்சர் (Photos)
இலங்கை - இந்தியா நட்புறவு நாடுகளின் தூதரக எற்பாட்டில் யாழ். மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள 250 பேருக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண - இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் தலைமையில் நேற்றைய தினம் (09.02.2023) இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
டாக்டர் அப்ஜப்துல்கலாக்கு அஞ்சலி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய தூதர உயரதிகாரிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் புகழ்பெற்றவர்களில் ஒருவரான டாக்டர் அப்ஜப்துல்கலாம் அவர்களுக்கு
யாழ்ப்பாண பொது நூலகத்தில் உள்ள இந்தியா கார்னரில்
இந்திய இணையமைச்சர் எல்.முருகன், மலர்மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தியமை
குறிப்பிடத்தக்கது.