மியான்மாரில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மியான்மாரை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதால், கொல்கத்தா மற்றும் பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மாரின் அக்யாப்பிலிருந்து கிழக்கே 70 மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
24 மணி நேரத்திற்குள் உணரப்பட்ட
தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி கொல்கத்தா மற்றும் அண்டை நாடான பங்களாதேஷில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
கடந்த 71 மணி நேரத்தில் மியான்மாரில் உணரப்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இது என்று தெரிவித்துள்ளது.
இதுவரை, எந்த சேதமும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. பங்களாதேஷில் 24 மணி நேரத்திற்குள் உணரப்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். செவ்வாய்க்கிழமை முன்னதாக, 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நாட்டில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பூமியில் 30 வினாடிகளுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு பகுதியில் பூகம்பம் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam