புதுக்குடியிருப்பில் ஐஸ் போதை பொருளை வைத்திருந்த 5 இளைஞர்கள் கைது
புதுக்குடியிருப்பு பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை, முல்லைத்தீவு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோம்பாவில் பகுதியில் நேற்று (02.02.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மன்னார், வலைஞர்மடம், திம்பிலி மற்றும் கைவேலி ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 முதல் 28 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனை நடவடிக்கை
வெகனார் வாகனத்தில் போதைப்பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை பெறுமதி 2 இலட்சத்து 25 ஆயிரம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 10 மணி நேரம் முன்
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam