இந்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று இலங்கைக்கு விஜயம்
இந்திய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
நான்கு நாள் பயணமாக இன்றைய தினம் (09.02.2023) இலங்கைக்கு வரும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
குறிப்பாக, இலங்கை மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நன்கொடையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாத்தில் யாழ்ப்பாண கலாசார மையத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இலங்கையின் வட மாகாண மக்களுக்கான கலாசார உள்கட்டமைப்பு விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த மையம் கட்டப்பட்டுள்ளது.
இலங்கை தலைவர்களுடன் சந்திப்பு
மேலும், இலங்கையில் இந்திய அரசாங்கத்தின், மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி பணியிடங்களை இணையமைச்சர் எல்.முருகன் பார்வையிடுவார் என்றும் கூறப்படுகின்றது.
அத்துடன், இலங்கை தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார் எனவும் இந்திய மத்திய தகவல் மற்றும்
ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.