அக்குரேகொட இரட்டை கொலை! வாட்ஸ்அப்பில் இடம்பெற்ற இரகசிய உரையாடல் கண்டுபிடிப்பு

Sri Lanka Police Colombo Crime Gun Shooting
By Dhayani Feb 21, 2026 11:58 AM GMT
Report

தலங்கம, அக்குரேகொடவில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல கொலைகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியந்துள்ளது.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கரந்தெனிய சுத்தாவினால் நடத்தப்பட்ட அனைத்து கொலைகளிலும் முக்கிய துப்பாக்கித்தாரி ரூபஸ் சுரேஷ் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அக்குரேகொட இரட்டைக்கொலை! இவரை கண்டால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

அக்குரேகொட இரட்டைக்கொலை! இவரை கண்டால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்

தலங்கம, அக்குரேகொட இரட்டைக்கொலையின் சந்தேகநபர்கள் கொலைக்கு T-56 துப்பாக்கி மற்றும் ரிவால்வரைப் பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அக்குரேகொட இரட்டை கொலை! வாட்ஸ்அப்பில் இடம்பெற்ற இரகசிய உரையாடல் கண்டுபிடிப்பு | Main Shooter In Akuregoda Murders Investigation

மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி கபுஹேன - உனகுருவ பகுதியில் உள்ள ஒரு கடையில் ஒரு தம்பதியினரை சுட்டுக் கொன்ற சம்பவத்திலும் இந்த துப்பாக்கித்தாரி ஈடுபட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அத்தனகல்ல - மீவல பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் உதவியாளர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளின் போது, ​​கொலைக்கு முந்தைய நாள், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கரந்தெனிய சுத்த, மல்வானே டுட்டு, மோதரா நிபுனா மற்றும் கோண்டா ரஞ்சி ஆகியோர் வாட்ஸ்அப் மூலம் அவருக்கு குழு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும் தெரியவந்தது.

வாட்ஸ்அப்பில் அழைத்து தகவல் விசாரித்த நபர்

கொலை நடந்த தினம் மாலையில், கரந்தெனிய சுத்தா மற்றும் மல்வானே டுட்டு ஆகியோர் இரண்டு சந்தர்ப்பங்களில் வாட்ஸ்அப்பில் அழைத்து தகவல் விசாரித்துள்ளனர்.

இதற்கிடையில், கொட்டிகாவத்தை பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியின் முன் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சிவப்பு நிற முச்சக்கர வண்டியில் வந்து துப்பாக்கியை ஒப்படைப்பது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

அக்குரேகொட இரட்டை கொலை! வாட்ஸ்அப்பில் இடம்பெற்ற இரகசிய உரையாடல் கண்டுபிடிப்பு | Main Shooter In Akuregoda Murders Investigation

இதற்கமைய, சிவப்பு முச்சக்கர வண்டியையும் அதில் இருந்தவர்களையும் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், அக்குரேகொட துப்பாக்கிச்சூடு தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

சந்தேகநபரின் தற்போதைய தோற்றத்தைக் காட்டும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல புகைப்படங்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. 

நாளை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்

நாளை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்

கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாம்! இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவுறுத்தல்

கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாம்! இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவுறுத்தல்

 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US