அக்குரேகொட இரட்டைக்கொலை! இவரை கண்டால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் அவசர அறிவுறுத்தல்
தலங்கம, அக்குரேகொடவில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மேலும், வழங்கப்படும் தகவல்களின் முழுமையான இரகசியத்தன்மை பராமரிக்கப்படும் என்று இலங்கை பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில், பின்வரும் விவரங்களைக் கொண்ட சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் உடல் விளக்கம்
உயரம்:- 5 அடி 5 அங்குலம்.
வயது:- 44 வயது.
நிறம்:- கருப்பு, பழுப்பு நிற கண்கள் மற்றும் நடுத்தர நிறம்
சிறப்பு அம்சங்கள்:- கன்னத்தின் வலது பக்கத்தில் உட்புறத்திலிருந்து ஒரு வெட்டு உள்ளது.
சந்தேகநபரின் தற்போதைய அடையாளம் AI-உருவாக்கப்பட்ட படங்கள் மூலம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சந்தேகநபரைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்: 071-8598008
நுகேகொடை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி: 071-8591641
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு பணிப்பாளர்: 071-8592279
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam