பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழு (video)
இந்தியாவின் மீன்வள மத்திய இணை அமைச்சர் அடங்கிய குழுவினர் பலாலி சர்வதேச விமானத்தை வந்தடைந்தனர்.
இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவினர் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
வரவேற்பு
யாழ். இந்திய துணைத் தூதுவர், சிவசேனை அமைப்பின் தலைவர், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையிலான அதிகாரிகள் இந்திய உயர்மட்ட குழுவினை மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ். கலாச்சார மத்திய நிலையத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்த குழு வந்துள்ளதாக தெரியவருகிறது.
தென்னிலங்கையில் 13ஆம் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள சூழ்நிலையில் இந்திய முக்கியஸ்தர்களின் வருகை முக்கியமானதொன்றாக பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன். மற்றும் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின் உயர்மட்ட குழு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.
மேலதிக தகவல் - கஜுந்தன்,தீபன்





















அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
