பொருளாதார மறுசீரமைப்புக்கு அமெரிக்காவின் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடல்
நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அமெரிக்காவினால் எத்தகைய உதவிகளை வழங்க முடியும் என்பது குறித்து இருநாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட பிரதிநிதிகளின் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ தலைமையில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் பிரதி உதவிப்பணிப்பாளர் அஞ்சலி கௌர் மற்றும் திறைசேரியின் பிரதி உதவிச்செயலர் ரொபர்ட் கப்ரொத் ஆகியோர் அடங்கிய அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று (5) காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.
நிதியியல் மீளெழுச்சி
அதன்படி, அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவிச்செயலர் ரொபர்ட் கப்ரொத் மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் நிதியமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அமெரிக்காவினால் எத்தகைய உதவிகளை வழங்க முடியும் என்பது குறித்தும், நிதியியல் மீளெழுச்சித்தன்மையை வலுப்படுத்த கூடியவாறான இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டிணைந்த வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |