தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையை அகற்றிய பொலிஸார்! யாழில் இன்றும் பெரும் கண்டனப் போராட்டம்
தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையைப் பொலிஸார் அகற்றியமையைக் கண்டித்தும், சிலையை உடனடியாக மீள நிறுவக் கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று(29) மாலையிலும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பொது அமைப்புகளின் ஏற்பாட்டில், யாழ். நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்துக்கு முன்பாக இன்று மாலை 4:30 மணிக்கு இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
பகிரங்க அழைப்பு
திலீபனின் நினைவாலயத்தில் புதிதாக வைக்கப்பட்ட சிலையை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸார் வலுக்கட்டாயமாக அகற்றிச் சென்றிருந்தனர்.

பொலிஸாரின் இத்தகைய அடாவடித்தனத்தைக் கண்டித்தும், திலீபனின் சிலையை அதே இடத்தில் மீள நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதற்கமைய, இன்றைய தினமும் நல்லூரிலுள்ள திலீபன் நினைவாலயத்தில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இதில் அனைத்துத் தரப்பினரையும் திரண்டு கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தத்தின் மூலம் இராணுவத்துக்குப் பொலிஸாரின் அதிகாரங்கள்! மொட்டு தரப்பு கடும் கண்டனம்
பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் நாமலைத் தொடர்ந்து சிறையில் அடைக்க முயற்சி! அரசு மீது மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு
ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா.. மிகப்பெரிய இலக்கு! சாதிப்பாரா ரஜினிகாந்த் Cineulagam
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
பிளாக்பஸ்டர் ஆகியுள்ள மண்டாடி படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam