மன்னாரில் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த வைத்திய அதிகாரி

Mannar Hospitals in Sri Lanka Northern Province of Sri Lanka Doctors
By Ashik Jun 06, 2025 01:40 PM GMT
Report

மன்னார்- பேசாலை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஈற்றன் பீரிஸ் நேற்றையதினம் (5) உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

 தனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கும் பழிவாங்கல் நடவடிக்கைக்கும் நீதி கோரி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

உண்ணாவிரத போராட்டம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஏழு வருடங்களாக மன்னார் பேசாலை வைத்தியசாலையில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வருகின்றேன்.இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் தொடர்ச்சியாகப் பழி வாங்கப்பட்டு வருகின்றேன்.

யாழ். செம்பியன்பற்று கடற்கரையில் குழப்ப நிலை

யாழ். செம்பியன்பற்று கடற்கரையில் குழப்ப நிலை

பழிவாங்கும் நடவடிக்கை

அவர் என்னை ஒரு வைத்தியராக மதிப்பதில்லை. நான் அவரை விட 10 வருடங்களுக்கு மூத்தவன். எனினும் அவரது படிப்புக்கு மரியாதை கொடுத்து நடந்து கொண்டேன். இந்த வைத்தியசாலையில் பணிபுரியும் சில பணியாளர்களை என்னை வேவு பார்ப்பதற்கு அவர் பயன்படுத்துகின்றார். அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.அதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.

மன்னாரில் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த வைத்திய அதிகாரி | Mannar Hospital Medical Officer Hunger Strike

இங்கு வேலை செய்வது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த வைத்தியசாலையில் நான் நிர்வாகத்தை மாத்திரம் அல்ல நோயாளிகளையும் பார்வையிட்டு வருகின்றேன். இந்த வைத்தியசாலையில் பணிபுரியும் எனக்குத்தான் தெரியும். நோயாளிகளை எவ்வாறு பார்த்துக் கொள்வது பணியாளர்களை எவ்வாறு நடத்துவது என்பது. ஆனால் அவர் மன்னார் வைத்தியசாலையில் இருந்து கொண்டு இங்கே இந்த வைத்தியசாலையை நடத்துகின்றார். இது மிகவும் அநீதியான ஒரு செயல்.

அவரது மேலதிகாரிகள் இவரை இவ்வாறு நடத்தினால் இவருக்கு எப்படி இருக்கும்.அவரும் வைத்தியர் .நானும் வைத்தியர் .அவர் என்னை மதிப்பதே இல்லை. அவரது இந்த நடவடிக்கையினால், என்னால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை.என் மீது சில பழிகளும் அவதூறுகளும் சுமத்தப்பட்டது.இருந்தபோதிலும் அது பொய் என்று நிரூபிக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி

உரிய நடவடிக்கை

மின்சாரக் கட்டணங்கள் இவ் வைத்தியசாலையில் உயர்ந்து வருவதாக வைத்திய அதிகாரி எனக்கு சுட்டிக் காட்டி அதைத் தொடர்ந்து தான் இது தொடர்பாக கவனம் செலுத்தி பணியாளர்களிடம் சுட்டிக்காட்டி தேவையற்ற முறையில் ஏசி பாவனையில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டு அதை இந்த வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்திய போதிலும் அது தொடர்பில் கவனம் செலுத்தாது என் மீதே இந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளார்.

மன்னாரில் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த வைத்திய அதிகாரி | Mannar Hospital Medical Officer Hunger Strike

கடந்த (11.05.2025) எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சடுதியானதும் நியாயமற்றது மான மின் பாவனை அதிகரிப்பு ஏற்படும் பட்சத்தில் அதற்கான மேலதிக கட்டணம் பொறுப்பதிகாரி இடமே அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நான் எவ்வாறு தொடர்ந்து வேலை செய்வது. நான் ஓய்வூதியம் பெறுவதா அல்லது வேறு வைத்தியசாலைக்கு மாறிச் செல்வதா, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனவே இந்த விடயத்தில் எனக்கு நியாயம் வழங்குமாறு மன்னார் மாவட்ட செயலாளர்,வடமாகாண ஆளுநர்,சுகாதார பணிப்பாளர் வடமாகாணம், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து நியாயம் கோரி போராடும் எனக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

ஈ.பீ.டீ.பி- தமிழரசு கட்சி இணைவு: முறிந்து வெளியேறும் புதிய தலைமை

ஈ.பீ.டீ.பி- தமிழரசு கட்சி இணைவு: முறிந்து வெளியேறும் புதிய தலைமை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US