கொழும்பில் பரஸ்பர துப்பாக்கி சூட்டு மோதல் - பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர்
கொழும்பு, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி காலை நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு அதிரடிப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 4:30 மணியளவில், கெந்தல்லாவிட்ட, பஹலகம, கஹதுடுவ பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததனர்.
சிறப்பு அதிரடிப் படை
அங்கு மறைந்திருந்த சந்தேக நபர் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகளும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.




