வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் உட்பட 3 பேர் விமான நிலையத்தில் கைது
வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் உட்பட மூன்று இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரியளவிலான பணமோசடி செய்ததாக தேடப்பட்ட மூன்று இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று மாலை, கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பதுங்கியிருந்த நிலையில், இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய அந்நாட்டு அரசாங்கம் அவர்களை நாடு கடத்தியிருந்தது.
பண மோசடி
கொச்சிகடை பிரதேசத்தை சேர்ந்த மாதிவெலகே ஆசித சாகர குணதிலக்க என்ற 33 வயதுடையவரும், சுமித் ரோலன்ட் பெர்ணான்டோ என்ற 44 வயதுடைய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகையிலை பெற்றுக் கொண்டு பல முறை காசோலை வழங்கி பல லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளனர்.
போதைப்பொருள்
இதனால் நாடு முழுவதும் 2 பேருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் புதுகுடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த செல்வராஜ் கபிலன் என்ற 34 வயதுடையவராகும்.
2023ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 31ஆம் திகதி கொடிகாமம் பகுதியில் வைத்து 240 கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் தப்பிச் சென்ற நபராகும்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
