வெளிநாட்டு பெண் மற்றும் இலங்கை காதலரை கொடூரமாக தாக்கிய கும்பல்
எல்ல நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதில் வெளிநாட்டவர் உட்பட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
32 வயதுடைய வெளிநாட்டுப் நாட்டு பெண், அவரது காதலன் என்று கூறப்படும் 26 வயதுடைய இலங்கை இளைஞர் மற்றும் அவர்களது நண்பரான 29 வயதுடைய இலங்கை இளைஞர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 3.00 மணியளவில் நடந்த தாக்குதலில் காயமடைந்த மூவரும் தியத்தலாவை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பெண்
கும்பல் ஒன்று குறித்த வெளிநாட்டுப் பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

எனினும் அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்கள் தலையிட்டு, தாக்குதல் நடத்தியவர்களை அங்கிருந்து வெளியேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய எல்ல பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam